டெல்லி: துணிச்சலான சீர்திருத்தங்கள், பெரிய உள்கட்டமைப்பு, சிறந்த திறமைகளுடன் புதிய இந்தியாவை நோக்கி நகர்வதாக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் தொடக்க மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி; அடுத்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயிப்பது ஆகியவற்றை இலக்காக கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுவதாக கூறினார். பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் கடந்த ஆண்டு இந்தியா சுமார் 84 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
கொள்கை ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சரியான மற்றும் நியாயமான அணுகுமுறையை ஒன்றிய அரசு பின்பற்றி வருகிறது. நமது இளைஞைர்களின் திறனை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக புதிய வாய்ப்புகளை மேலும், ஆராய்வதற்கான சூழல் அமைப்பை அவர்களுக்கு வழங்குவதாக கூறிய பிரதமர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இந்தியாவின் சாதனைகள் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குவதாக கூறினார். மேலும் இந்தியா உலகளாவிய உற்பத்தி சக்தியாக உருவாக்கி வருவதாகவும், இந்தியாவில் முதலீடு செய்வது என்பது ஜனநாயகம் உலகத்திற்கான முதலீடு எனவும் தெரிவித்தார்.