தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு 29-ந் தேதி முதல் வடலிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த மழையில் முதல் மழைப்பொழிவு நவம்பர் 6 ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள அதிகாரிகளிடம் மழை மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழை தொடர்பாக வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அப்போது அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்த வீடியோ கால் அழைப்பில் முதலமைச்சர் பேசினார். அதன் பின்னர் “இது அவசர காலம்னு தெரியாதா? ஏன் இன்னும் எழுபது பென்டிங்ல இருக்கு உடனடியாக பணிகளை விரைந்து முடியுங்கள்” என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.