ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த துரை வைகோ… என்ன பேசினார்கள் தெரியுமா?

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரை நடை பயணத்தில், ராகுல் காந்தியுடன் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ இன்று பங்கேற்று கலந்து கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தமிழகத்தில் தொடங்கி பல்வேறு மாநிலங்கள் வழியாக கடந்த சில வாரங்களாகவே மேற்கொண்டு வருகிறார். பாஜக-வுக்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த பயணம் இன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நடைபயணத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டார்.
image
இதுகுறித்து பேசிய துரை வைகோ, “இரண்டு மணி நேரம் கலந்து கொண்டதில் தமிழக அரசியல் நிலவரம், தேசிய அரசியல் குறித்து ராகுல் பேசினார். குறிப்பாக பா.ஜ.க வுக்கு எதிராக முன்னெடுப்பு நடவடிக்கை குறித்தும், உலகம் முழுவதும் இடதுசாரி, வலதுசாரி அரசியல் நடவடிக்கை குறித்தும் ராகுல் பேசினார். அதேபோல் தலைவர் வைகோவின் உடல் நலம் குறித்தும் பேசி கேட்டறிந்தார்” என தெரிவித்தார்.
image
இவர்கள் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.