கேஜிஎப் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வசூலை வாரிக் கட்டின. அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படமும் பாக்ஸ் ஆஃபீஸில் கொடிக்கட்டி பறந்தாலும், கேஜிஎப் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைபடங்கள் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸில் இணைந்தன. இந்திய அளவில் மெகாஹிட் படங்களாக இருந்த இந்தப் படங்களுக்கு பின்பு, அதாவது அண்மைக் காலத்தில் வெளியான விக்ரம் திரைப்படமும் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்தது.
அதன்தொடர்ச்சியாக இப்போது வெளியாகியிருக்கும் கந்தாரா திரைப்படம், முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. இதன்பிறகு படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் சென்றது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது கந்தாரா. தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கந்தாரா படக்குழுவினரை வெளிப்படையாக பாராட்டினார். இயக்குநரை வீட்டிற்கு வரவழைத்தும் அவர்களை வாழ்த்தினார்.
வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் இப்போது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பணமழையில் நனைந்து கொண்டிருக்கிறது. விக்ரம், பொன்னியின் செல்வன் வரிசையில் இப்படமும் பாக்ஸ் ஆஃபீஸில் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. வெற்றிநடைபோட்டு வரும் காந்தாரா படம் மேலும் சில வசூல் சாதனைகளையும் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் அதன் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி செம்ம ஹாப்பியாக உள்ளாராம்.
மேலும் படிக்க |