சென்னை: சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மரங்களை நடும் பணியை பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.