புதுடில்லி : புதுடில்லியின் ஹரி நகர் பகுதியில் வசித்தவர் சமீர் அஹுஜா,38, இவரது மனைவி ஷாலு,35. இந்த தம்பதி வீட்டில் ஷப்னா,33 என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த மூவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். நேற்று காலையில் வேலைக்கு வந்த டிரைவர் கொடுத்த தகவல் பேரில், போலீசார் வந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர்.
வீட்டின் கீழ்தளத்திலேயே ஷாலு நடத்தி வரும் சலூனில் வேலை பார்த்து, சில மாதங்களுக்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்ட சச்சின்,19, சுஜீத்,21 ஆகிய இருவருக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement