ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், ப்ளூ டிக்குகளைப் பெறுவதற்கு, மாதத்திற்கு 8 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 661 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ட்விட்டரில் கணக்கு சரிபார்க்கப்பட்டதை குறிப்பதே நீல நிற டிக். இது குறித்து எலான் மஸ்க் பதிவு செய்த ட்வீட்டில், சம்பந்தப்பட்ட நாட்டின் வாங்கும் திறனுக்கு ஏற்ப ப்ளூ டிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், ட்விட்டரில், ‘ஸ்பேம் மற்றும் ஸ்கேமை’ நீக்குவது மிகவும் முக்கியம். மேலும் பதில் அளிப்பதிலும், தேடலில் பயனர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். இதில் பெரிய அளவிலான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பகிர முடியும்.
இது தவிர, விளம்பரங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்த முடியும்” எனவும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் தற்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
ஆரம்பத்திலேயே தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் ஆகியோரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து ட்விட்டரின் இயக்குனர்கள் குழுவையும் கலைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in