வெளிநாட்டு தொழில் வாய்ப்பு

சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய நிர்மாணத் திட்டங்களில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள தகுதி வாய்ந்தவர்களின் , தகவல்களை சேகரிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் கட்டிடக் கலைஞர்கள (Architects), பொறியியலாளர்கள் (Engineers) மற்றும் அளவு கணக்கெடுப்பாளர்கள் (Quantity Surveyors) ஆகியோருக்கு பல வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம் உருவாகலாம் என்று பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் என்பன இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு அந்த வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக சவூதி அரேபியாவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளன.

அதன்படி, அந்த தொழில்களில்; ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இலங்கையர்கள் தங்கள் தகவல்களை 2022.11.05 ஆம் திகதிக்கு முன்னர் www.slbfe.lk என்ற பணியகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள Identification of qualified professionals for construction sector in K.S.A (web portal) ஊடாக தமது சுய விபர கோவைகளை தரவு வங்கியில் பதிவு செய்ய வேண்டும்.

பணியகத்தின் 24 மணி நேர தகவல் நிலையத்தின் துரித இலக்கம் 1989ஐ அழைப்பதன் மூலம் இந்த வேலைகளுக்கான பதிவு மற்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.