2022ஆம் ஆண்டு வாக்காளர் டாப்பில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாக்காளர் டாப்பை உறுதிப்படுத்தும் பணி இடம்பெறுவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.
அதன்படி, இதுவரை வாக்காளர் டாப்பில் தமது பெயரை பதிவுசெய்யத்தவறியவர்கள் அடுத்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் தமது பெயரை சேர்க்க முடியும்
எவ்வாறாயினும், முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு மாத்திரம் நவம்பர் மாதம் வாக்காளர் டாப்பில் தமது பெயரை உள்ளிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.