கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருநெல்வேலி, கரூர், திருப்பூர், ஊட்டி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 35 இடங்களில் வருமான வரி துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தீபாவளி பண்டிகையின் போது பிரபல துணிக்கடைகள் தங்களின் வருமானத்தை குறைத்து காட்டிய புகாரின் அடிப்படையில், இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேவி டெக்ஸ், சிவா டெக்ஸ், கன்னிகா பரமேஸ்வரி, மகாலட்சுமி குரூப், மேக்னா குரூப் உள்ளிட்ட டெக்ஸ்டைல் நிறுவனங்களில் இந்த ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.
துணிக்கடைகள் (டெக்ஸ்டைல்) மற்றும் துணிக்கடைகளுக்கு சம்பந்தமான இடங்களில் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த தீபாவளி பண்டிகை விற்பனையின் போது, அதிக அளவு விற்பனை நடைபெற்றதாகவும், ஆனால் வருமானத்தை குறைத்து காட்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். சோதனை முடிந்தபின் எவ்வளவு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.