வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.முக்கிய வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் நோக்கம் அதிகபட்ச வேலை வாய்ப்பு மற்றும் பணவீக்கத்தை நீண்ட காலத்திற்கு 2 சதவீதத்தில் அடைவதாகும்.
இந்நிலையில், அமெரிக்காவில் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 8.2 சதவீதமாக குறைந்துள்ளது.இது ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாக இருந்தது. எனினும் பணவீக்கம் 2 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை விட அதிகமாக உள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன் காரணமாக வட்டி விகிதம் 3.75 சதவீதம் என்ற நிலையிலிருந்து 4 சதவீதம் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2008க்கு பின், அதிகபட்ச வட்டி விகித உயர்வாக இது பார்க்கப்படுகிறது.வட்டி விகிதங்களை உயர்த்துவது ஒரு பணவியல் கொள்கையாகும். இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் தேவையை குறைக்க உதவுகிறது.அதன் மூலம் பணவீக்க விகிதம் குறைய உதவுகிறது.