இமாச்சலில் இந்த மாதம் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்: பரப்புரையில் ஈடுபட அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம்

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் இந்த மாதம் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இமாசலப்பிரதேசத்தில் ஹமிர்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். ராஜாக்களும், ராணிகளும் உள்ள காங்கிரஸ் சாமானியமாக ஒரு நபர் முதலமைச்சர் ஆகவே முடியாது என்று தெரிவித்தார். தற்போதைய தேர்தலில் முதலமைச்சர் பதவி தருவதாக 10 பேரிடம் காங்கிரஸ் மேலிடம் ஆசை காட்டி இருக்கிறது என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். இது சொற்ப தொகுதிகள் ஆவது வெல்வதற்கு, காங்கிரஸையும் தந்திரம் என்றும்  அமித்ஷா விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியில் அரசியல் பின்புலமின்றி முதலமைச்சர் ஆகலாம் என்று யாரும் யோசிக்க கூட முடியாது என்று அமித்ஷா தெரிவித்தார். பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, ஒரு பதவி, ஒரு பென்ஷன், காஸ்மீரில் 370 சட்டப் பிரிவை நீக்கியது போன்றவற்றை மோடி ஆட்சியின் சாதனைகள் என்று குறிப்பிட்டார். 60 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி இமாச்சலப்பிரதேசத்திற்கு ஒன்றும் செய்ய வில்லை என்று அமித்ஷா குற்றம் சாட்டினார். ஆனால், பாரதிய ஜனதா ஆட்சியால் தான் இமாச்சலில் அனைத்து வீடுகளுக்கு கழிவறையும், மின்சார வசதி கிடைத்ததாக அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.