இராஜராஜ சோழன் 1,037 ஆவது சதய விழா: அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை…

சென்னை: இராஜராஜ சோழன் 1,037 ஆவது சதய விழாவையொட்டி,  மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.  சதயவிழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டிய ஐப்பசி நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழகஅரசு அறிவித்த உள்ளது. நடப்பாண்டு ராஜராஜ சோழனின்  1,037 ஆவது சதய விழா.

இந்த விழாவானது நேற்று (புதன்கிழமை) காலை திருமுறையுடன் தொடங்கியது. தொடர்ந்து கவியரங்கம், பரதநாட்டியம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று, (வியாழக்கிழமை )  திருமுறை ஓதுவார்களுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பாக புத்தாடை வழங்கி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகில் உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  தொடர்ந்து இராஜ வீதிகளில் திருமுறை வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பெருவுடையாருக்கு அபிசேகம் நடைபெறுகிறது.  விழாவினை முன்னிட்டு வியாழக்கிழமை (நவ.3) தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.  சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட பெரிய கோவில் அருகே இருக்கும் பாலம் உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் தஞ்சை நகரமே விழா கோலம் கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.