கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் கொலை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்ட குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. இந்த உடல் பாகங்கள் அனைத்தும் பத்மா உடையது தானா என்பதை அறிய காவல் துறையினர் மருத்துவர்கள் உதவியோடு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 56 துண்டுகளில் ஒரு பாகம் பத்மாவின் உடல் என்று டிஎன்ஏ முடிவுகள் வெளியாக்கியுள்ளது.
பகல்சிங் என்பவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு நரபலி கொடுத்த தமிழகத்தின் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவர் படுகொலை செய்யப்பட்டு நரபலி கொடுத்ததாக வெளியான தகவலை தொடர்ந்து முகம்மது சபி பகல்சிங் லைலா அகியோர் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு நரபலி கொடுத்து பகல்சிங் வீட்டின் அருகே புதைக்கப்பட்டிருந்த உடலின் பாகங்கள் போலீசார் தோண்டி வெளியே எடுத்தனர். இந்த உடல்கள் 56 துண்டுகளாக வெட்டி மண்ணில் புதைக்கப்பட்ட காரணத்தினால் இந்த உடல் பாகங்கள் பத்மாவினுடையது தானா என்பதை உறுதி செய்ய பத்மாவின் இரண்டு மகன்கள் சேட், செல்வராஜ் கணவர் ரங்கன் ஆகியோர் இடத்தில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனை ஆனது நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 56 பாகங்களில் ஒரு பாகத்தினுடைய முடிவு வெளியாகி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பத்மாவினுடைய உடல் பாகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து மேலும் 55 உடல் பாகங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் பத்மாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.