இந்தியாவில் முன்னணி வங்கியாக திகழ்ந்து வரும் வங்கிகளில் முதன்மையாக கருதப்படும் வங்கிதான், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் Circle Based Officers (CBO) 1,422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 1,400 பணியிடங்கள் நேரடியானது. 22 பணியிடங்கள் பேக்லாக் செய்யப்பட்டவையாகும். குறிப்பாக போபால், புவனேஸ்வர், ஐதராபாத், கொல்கத்தாக ஆகிய நகரங்களில் தலா 175 பணியிடங்கள், ஜெய்ப்பூர், மகாராஷ்டிராவில் தலா 200 பணியிடங்கள், வடகிழக்கு மாநிலங்களில் 300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 30.09.2022 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
சம்பளம்: ரூ. 36,000 முதல் ரூ.63,840 வரை பெறலாம்
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆங்கிலத் திறனை சோதிக்கும் பேப்பர்/பேனா முறை விரிவான எழுத்துத் தேர்வு / நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று நிலையில் தெரிவு முறை இருக்கும்.
அந்தந்த வட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் மொழிகளை பேச எழுத தெரிந்திருக்க வேண்டும். இறுதி பட்டியலில் இடம் பெற்ற மொழி அறிவு சோதனை நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் உறுதி செய்யப்படும்.
மேலும், 30.09.2022 அன்றைய தேதியில், ஏதேனும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் (Scheduled Commercial Banks) 2 ஆண்டுகள் பணி செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? https://bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.