பிக்பாஸ் 6 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அசல் கோலார், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அவரின் எலிமினேஷன் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மக்களில் பெரும்பாலானோருக்கு அந்தளவுக்கு ஷாக் கொடுக்கவில்லை. ஆசிம் அல்லது அசல்கோலார் ஆகியோரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்பதில் உறுதியாக இருந்தனர். ஏனென்றால் அசல் கோலார் பெண்களிடம் தொட்டு பேசி பழகிய விதமும், ஆசிம் நடந்து கொண்ட விதமும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அசல் கோலாரை விமர்சிக்கவே ஒரு கூட்டம் இருந்தது. தினமும் அவர் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் பேசும் வீடியோவை மட்டும் கட் செய்துபோட்டு அசல் கோலாரை விமர்சிக்க தொடங்கினர்.
இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் அசல் கோலார். அதன்பிறகு சில நாட்கள் ரிலாக்ஷான அவர், பிக்பாஸ் வீட்டில் நடப்பது குறித்தும், தான் அங்கு நடந்து கொண்ட விதம் குறித்தும் விளக்கமாக பேசியுள்ளார். தான் ஒன்றும் தவறாக நடக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், பொதுவெளியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் உள்ளிட்ட யாரும் இந்த கண்ணோட்டத்தில் என்னை பார்க்கவில்லை, வெளியில் அப்படி தெரிந்திருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் அந்த பேட்டியில், ” நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களாக இருக்கும் பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்ளவில்லை. என் சொந்த வீட்டில் இருப்பது போல், என் நண்பர்களுடன் நெருங்கி பழகுவது போல் நடந்து கொண்டேன். அது வெளியில் இவ்வளவு தவறாக தெரியும் என நினைக்கவில்லை. நான் செய்தது தவறு தான். ஆனால் தப்பான நோக்கத்தில் செய்யவில்லை. ஒருவேளை என் நோக்கம் தப்பாக இருந்தால் அவர்கள் கண்டிப்பாக மறுப்பு சொல்லி இருப்பார்கள். அவர்களும் என்னை நல்ல நண்பனாக தான் பார்த்தார்கள். கடைசியில் வெளியில் இப்படி தெரிந்து விட்டது. எனக்கு மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மறுபடியும் சென்றால் கண்டிப்பாக வேற மாதிரி விளையாடுவேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.