182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18, 2023 உடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி ஆகாஷ் பவனில் உள்ள ரங் பவான் ஆடிட்டோரியத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அவர்கள், குஜராத் மாநில சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் நடத்தப்படும், வேட்புமனு தாக்கல், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் பிரச்சாரத்திற்கான கட்டுப்பாடுகள், வாக்குப்பதிவை ஒட்டி செய்யப்படும் ஏற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை அறிவிக்கவுள்ளார். குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 24 ஆண்டுகளாக அக்கட்சி ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. இந்த சூழலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பாஜகவின் கையே ஓங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.