குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது பாஜக 111,
காங்கிரஸ்
62 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளன. இம்மாநில சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18, 2023 உடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
முதல் கட்டத் தேர்தல் (89 தொகுதிகள்)இரண்டாம் கட்டத் தேர்தல் (93 தொகுதிகள்)வேட்புமனு தாக்கல் கடைசி தேதிநவம்பர் 14நவம்பர் 17வேட்புமனு பரிசீலனைநவம்பர் 15நவம்பர் 18திரும்பப் பெற கடைசி நாள்நவம்பர் 17நவம்பர் 21வாக்குப்பதிவு நாள்டிசம்பர் 1டிசம்பர் 5வாக்கு எண்ணிக்கைடிசம்பர் 8டிசம்பர் 8தேர்தல் நடைமுறைகள் முடியும் நாள்டிசம்பர் 10டிசம்பர் 10
இந்நிலையில் குஜராத் மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 142 பொதுத்தொகுதிகள், 13 எஸ்.சி, 27 எஸ்.டி தொகுதிகள் ஆகும். இதற்காக 17,506 நகர்ப்புற வாக்குச்சாவடிகளும், 34,276 கிராமப்புற வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.
குஜராத் தேர்தலில் 4.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இது கடந்த 2017 சட்டமன்ற தேர்தலை காட்டிலும் 3.29 சதவீதம் அதிகம் ஆகும். 1,274 வாக்குச்சாவடிகள் பெண்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும். 182 வாக்குச்சாவடிகளில், 1 பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும்.
முதல்முறையாக 33 வாக்குச்சாவடிகள் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும். மொத்தம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்தல் டிசம்பர் ஒன்றாம் தேதியும், இரண்டாம் கட்டமாக 5ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.