கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்! அண்ணன் தம்பியாக வாழும் எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பேட்டி…

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு இன்று வந்த ஜமாத் நிர்வாகிகள், இந்து முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என தெரிவித்தனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஜமாத் மற்றும் இந்து மத அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், கோட்டை பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் ஜமாத் உலமாக்கள் இன்று, கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்களை கோவில் பூசாரிகள்,  கோவில் செயலர்  இணைந்து கைகூப்பி, சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  இந்த மத நல்லிணக்க கூட்டத்தில்   ஜமாத் கூட்டமைப்பு தலைவர் இனாயகதுல்லா தலைமையில் 13 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கோவிலுக்குள் அமர்ந்து ஜமாத் நிர்வாகிகள் அங்கு நட மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்று உள்ளனபேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜமாத் கூட்டமைப்பினர், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தவர்கள், இஸ்லாம்  வன்முறைக்கு எதிரானது. மதநல்லினத்திற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. கோவையில் மத நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று கூறினர். கோட்டை மேடு பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் மத அரசியலை உட்படுத்த வேண்டாம், எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த கோயில் நிர்வாகத்திற்கு நன்றி.

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை கோவையில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் தேர் திருவிழா நடக்கும் போதெல்லம் இஸ்லாமியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம்.’ என கூறிய  ஜமாத் கூட்டமைப்பின் தலைவரான இணையதுல்லா, சிறுபான்மை மக்கள் அனைவரும் பெரும்பான்மையினரோடு, நல்லிணக்கத்தோடு வாழ்வதை விரும்புகிறோம். இந்த வருகை நல்லிணக்கம் பேணுவதற்காக, தொடர்ந்து கோவையில் ஜமாத்துகள் ஒன்றிணைந்து, சிறுபான்மை மக்கள் பெருபான்மை மக்கள் ஒன்றிணைந்து நற்பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளோம். எந்த அரசியலுக்கும் யாரும் ஆட்பட்டு விடக்கூடாது” என்றவர்,  அரசியலுக்கு மதத்தை பயன்படுத்தாதீர்கள் என தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.