டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் 360 டிகிரி என ரசிகர்களால் அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி இப்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி உள்ளார்.
நேற்று ஐ.சி.சி. வெளியிட்ட டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 863 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
நியூசிலாந்தின் டெவோன் கான்வே 792 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் தவிர, இந்தியா சார்பில் விராட் கோலி 10ஆவது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் டி20 உலகக் கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 780 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.
newstm.in