தெலங்கானாவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பொனாலு பண்டிகையில் பங்கேற்று சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் யாத்திரையை முடித்த ராகுல், தெலங்கானாவில் தற்போது யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவின் 57வது நாளில், தெலுங்கானாவின் பாரம்பரிய பொனாலு திருவிழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். இந்த திருவிழாவில் பழங்குடி மக்கள் தங்களை தாங்களே சாட்டையால் அடித்துகொள்ளும் பாரம்பரிய நிகழ்வில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, கனமான கயிற்றை எடுத்துக்கொண்டு தன்னைத்தானே அடித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து, உரத்த மேள தாளங்களுடன் அங்கிருந்த பழங்குடி மக்களுடன் நடனமாடினார்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற மற்றும் 17 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் யாத்திரையை முடித்த பிறகு நவம்பர் 7ம் தேதி மகாராஷ்டிராவில் யாத்திரை நுழையும் எனவும் இதனிடையில் நவம்பர் 4ம் தேதி யாத்திரைக்கு ஒரு நாள் இடைவெளி எடுக்கப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது ராகுல் காந்தி போது அறிஞர்கள், விளையாட்டு, வணிகம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இதையும் படியுங்கள் – “இதுல எது பிரேக்கு?..” – டவுரியாக வந்த கார்.. மணமகனால் அத்தைக்கு நேர்ந்த பரிதாபம்! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM