சிவபுரி: மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் மது மற்றும் அசைவ உணவு விருந்து வழங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கானியாதானா பிளாக்கிற்கு உட்பட்ட போட்டா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த மது மற்றும் அசைவ விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் மதுவிருந்து எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.
பள்ளி வளாகத்தில் பார்ட்டி நடந்தபோது, அந்த ஆசிரியரும் குடிபோதையில் இருந்ததாகவும், அதை வீடியோ எடுத்த உள்ளுர்வாசிகளுடன் சண்டையிட்டதாகவும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கூறி உள்ளார்.ஆசிரியரின் செயல், நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்றும் வட்டார கல்வி அதிகாரி மற்றும் பிச்சோர் துணைக்கோட்ட வருவாய் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.