காரைக்கால் : காரைக்காலில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை மற்றும் திருத்தல் பணி குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தேர்தல் துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் முகமது மன்சூர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வரும் 9ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை அனைத்து ஓட்டுச்சாவடி நிலைய அதிகாரிகள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவைக்கு மனுக்கள் பெற கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் காரைக்காலில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய பணிகளையும் விரைவாக நிறைவு பெறும் என கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் துணை கலெக்டர் பாஸ்கர், காங்., மாவட்ட தலைவர் சந்திரமோகன், வாக்காளர் பதிவு அதிகாரி சுபாஷ். உதவி வாக்காளர் பதிவு அதிகாரி பக்கிரிசாமி மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement