இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் அதன் 5G சேவையை அறிமுகம் செய்து ஒரே மாதத்தில் 10 லட்சம் பயனர்களை ஈர்த்துள்ளது அந்த நிறுவனத்தை பெரும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன்மூலம் 5G சேவையில் ஜியோ மற்றும் Vi ஆகிய போட்டி நிறுவனங்களை விட ஏர்டெல் நிறுவனம் தற்போது முன்னிலையில் உள்ளது. கடந்த மாதம் இந்த 5G சேவையை டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்தது.
மற்ற நகரங்களுக்கு படிப்படியாக இந்த சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இது 5G சேவையின் தொடக்க காலம் என்றாலும் வாடிக்கையாளர்களின் ஆர்வம் மிகவும் உணர்ச்சி தூண்டுவதாக இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.
Whatsapp மூலம் இனி நமக்கு நாமே மெசேஜ் அனுப்பலாம்! விரைவில் வரும் அப்டேட்!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐர்தேல் நிறுவனம் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக 5G சேவையின் சோதனையை தொடங்கியது. தற்போது இந்த 5G சேவைக்கான போட்டியில் ஜிவ் மற்றும் Vi ஆகிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.
இன்னும் இந்த சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியவுடன் வாடிகையாளர்கள் 5G Plus சேவையை பெறலாம் என்றும் இதற்காக Sim எதுவும் மாற்றத்தேவையில்லை என்றும் தற்போது இருக்கும் 4G சிம் 5G சப்போர்ட் செய்யும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
Netflix ஆப் உள்ளே உள்ள ரகசிய Secret Codes! இதைவைத்து பல விஷயங்கள் செய்யமுடியும்!
5G சேவை
இந்த புதிய 5வது ஜெனரேஷன் இணைய சேவையில் மிகவும் அதிகப்படியான வேகத்தில் நமக்கு இணைய சேவை கிடைக்கும். 3G மற்றும் 4G சேவையுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் அதில் குறைந்த Latency இருக்கும்.
Whatsapp BAN பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்! Good Morning சொன்னால் தடை!
Low latency என்றால் மிகப்பெரிய டேட்டா உள்ள டேட்டா, போட்டோ, வீடியோ போன்ற விவரங்களை மிகவும் குறைந்த நேரத்தில் திறக்கும் வசதி ஆகும். மிகப்பெரிய அளவு 5G சேவை வந்தால் மருத்துவம், உற்பத்தி, சேமிப்பு கிடங்கு சுரங்கம் போன்ற இடங்களில் ரிமோட் டேட்டா மூலம் கண்காணிக்கும் வசதி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்