கர்நாடக: கர்நாடக தும்குரு மாவட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் தாய் அட்டை இல்லாததால் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே பிரசவமானதில் கஸ்தூரி மற்றும் அவருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைந்திருப்பதாக கர்நாடக சுகாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.