மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊரான மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், “ மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்தவர்களில், 3 பெண்கள், 5 வயது சிறுமி உட்பட 11 பேரும் இறந்துவிட்டனர். காரை ஓட்டியபோது ஓட்டுநர் தூங்கியதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கின்றனர். காவல் துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்” என்றனர்.
இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ,50,000 வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறார்.