குழந்தை திருமணம் நடைபெறவில்லை! சிறுமியின் தந்தை & தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 2021ம் ஆண்டு, 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, தீட்சிதர்களுக்கு எதிராக, கடலூர் அனைத்து மகளிர் போலீஸில் மாவட்ட பெண்கள் நல ஊரக அலுவலரான தவமணி என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பல தீட்சிதர்களை கைது செய்தனர். 

குழந்தை திருமணத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பது ச்ட்டம் என்றாலும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பழங்கால நடைமுறைப்படி இன்னமும் குழந்தை திருமணத்தை செய்துவைப்பதாக தொடர்ந்து பேச்சு எழுந்தது. அப்படி, சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர் ராஜரத்தினம் என்பவர் தனது மகளை (15 வயது) கடந்த திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

இந்தத் தகவல் கசிந்ததை அடுத்து சமூக நலத்துறை அலுவலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்தபோது குழந்தைத் திருமணம் செய்தது உறுதியானது. அதுதொடர்பான புகைப்பட ஆதாரமும் கிடைத்தது. இதனையடுத்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ், பொது தீட்சிதர் செயலாளர் ஹேமச்சந்திரா, தீட்சிதர் ராஜரத்தினம், அவரது தந்தை வெங்கடேஸ்வர தீட்சிதர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் குழந்தை திருமணம் ஏதும் நடத்தப்படவில்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரி, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களான தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், தீட்சிதர் குல வழக்கப்படி நடராஜர்-சிவகாமி அம்மன் சன்னதியில் திருக்கல்யாணம் நடைபெறும் எனவும், பல குடும்பத்தினர் இந்த திருக்கல்யாண வைபவத்தை நடத்தியுள்ளதாகவும், அவை உண்மையான திருமணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீட்சிதர்களுக்கும், நடராஜர் கோவிலுக்கும் உள்ள நன்மதிப்பை கெடுக்கும் விதமாக பதியப்பட்டுள்ள இந்த  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவுன்,  மருத்துவப் பரிசோதனை செய்ததால் மனதளவில் பாதிக்கப்பட்ட தனது மகள், பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்து வருவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.