மயிலாடுதுறை: சீர்காழி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் 2-வது நாளாக கனமழை நீடிப்பதால் 5,000 ஏக்கரில் சம்பா பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தொடரும் மழையால் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம், பூம்புகாரில் மழைநீர் சூழ்ந்தது. சீர்காழி, கொள்ளிடம், ஆலஞ்சேரி, எட்டமணல், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 5,000 ஏக்கரில் நெற்பயிர் முழ்கியது.