புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதிக அளவில் மோசமடைந்து இருப்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க டெல்லி அரசுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் மாசு நிலை சீராகும் வரை டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதற்காக டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. 5-ம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உட்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்று மாசுபாடு வட இந்திய பிரச்சனை. ஆம் ஆத்மி, டெல்லி அரசு அல்லது பஞ்சாப் அரசு மட்டும் பொறுப்பல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.