விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டிசம்பர் 15-ம் தேதி புதிய தமிழகம் வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பு மாநில மாநாடு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெறுகிறது. இந்துக்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் வகையில் இந்த மாநில மாநாட்டில் அனைத்து சமுதாய மக்கள், இந்து அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழக அரசின் செயல்பாடு மதிப்பெண் போடும் நிலையில் இல்லை. அதேவேளையில், ஆட்சி இருப்பதால் அதிகாரத்தை வைத்து என்னுடைய அரசியலை முடக்க நினைத்தால் அது வெற்றி பெறாது. மாநிலக் கட்சிகளின் துணையோடுதான் இனி ஆட்சி அமைக்க முடியும் என மம்தா பானர்ஜி சொல்வது அரசியல் உள்ளார்ந்த நோக்கம் கொண்டது. பிரிவினை வாதத்தினுடைய வேறு வடிவமாகவே தான் இதை பார்க்கிறேன். ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க.வினர் மனு கொடுத்தது பற்றி இப்போது பதில் கூற விரும்பவில்லை. அதற்கு மாற்று ஏற்பாடுகள் உள்ளது” என்றார்.