திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் ஆபத்தை உணராமல் தரைப் பாலம் தடுப்பு வேலிக் கம்பி மீது ஏறி டைட்டானிக் பட பாணியில் செல்ஃபி எடுத்த இளைஞர் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதனை அவரது ஆண் நண்பரும் தோழியும் புகைப்படம் எடுப்பதும் போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது தொடர் மழை காரணமாக திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஆவடி சாலை – திருவேற்காட்டை இணைக்கும் பருத்திப்பட்டு தரைப் பாலத்தின் அடியில் மழைநீர் நிரம்பி செல்கிறது.
இந்நிலையில் இளைஞர்களின் இத்தகைய சாகச செயல்களை தடுப்பதற்கு மழைக்காலங்களின் போது இத்தகைய தரைப்பாலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.