புதுடெல்லி: கடந்த 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 2.8 லட்சம் குறைந்துள்ளது. இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (யுடிஐஎஸ்இ+) 2021-22ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன.
* நாட்டில் 15.09 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை, 2020-21ம் ஆண்டில் 14.89 லட்சமாக குறைந்துள்ளது.
* தனியார் மற்றும் பிற நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படுவதே, மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை சரிவுக்கு முக்கிய காரணம்.
* ஆசிரியர்களின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டை விட 1.95 சதவீதம் குறைந்துள்ளது
* 44.85 சதவீத பள்ளிகளில் மட்டுமே கணினி வசதிகள் உள்ளது.
* நாட்டின் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 95.07 லட்சமாக இருந்தது, 2020-21ல் இது 97.87 லட்சமாக குறைந்துள்ளது.
* 34 சதவீத பள்ளிகளில் இணைய இணைப்பு உள்ளது.
* 27 சதவீத பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளுக்கான சிறப்பு கழிப்பறைகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.