சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி உயிரிழந்தார். மர்ம நபர்கள் சுட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதிர் சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயில் ஒன்றில் கடவுள் சிலை குப்பையில் வீசியதற்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.