புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் நளினி மற்றும் ரவிசந்திரன் ஆகியோர், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணயை நவ.11க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் 1991ல் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவளன் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்தக் கொலையின் முக்கியக் குற்றவாளிகளான நளினி மற்றும் ரவிசந்திரன் இருவரும், தங்களையும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூனில் மனுத்தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை வரும் 11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
முன்னதாக, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு செப்.26ல் உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement