வடக்கு, கிழக்கில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால்  வெளியிடப்பட்டது.

2022 நவம்பர்04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2022 நவம்பர் 04ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.