சென்னை: வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விற்பனை விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை சில்லறையில் வாங்கும்போது லிட்டருக்கு ரூ.12 அதிகரிக்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இனி ஒரு லிட்டர் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ.60க்கு சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் பால் கொள்முதல் விலையை ஏற்றியதால் அதனை ஈடுக்கட்ட ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விற்பனை விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது, மற்ற வகையான பால் விலையில் மாற்றமில்லை என்று விளக்கம் அளித்துள்ளதுடன், பால் கார்டு வைத்திருக்கும் பொதுமக்களுக்கு அதே 48 ரூபாய் தான். என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், மற்ற தனியார் நிறுவனங்கள் 70 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். தமிழக அரசு அதைவிட 10 ரூபாய் குறைவாக தான் விற்று வருகிறது என தெரிவித்ததுடன், பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பால் விலை ரூ.10 குறைவு என்று சுட்டிக்காட்டினார்.