தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. அதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழத்தில் வரும் நவம்பர் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.