Testenium – meta கம்ப்யூட்டிங் நிறுவனத்துடன்  இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Testenium – meta Computing நிறுவனத்துடன் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Testenium, meta கம்ப்யூட்டிங் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த நிகழ்நிலை பரீட்சிக்கும் தளம் (Online Testing Platform) ஒன்றினை நிறுவி, இயக்கி வருகிறது.

அத்துடன் அதன் நிறுவுனரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருமான கலாநிதி அரசரட்ணம் தனது பல்கலைக்கழகத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக தகவல் தொழில்நுட்பக் கல்வியின் அடுத்த பரிமாணத்தை தற்கால மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் விடாமுயற்சியினால் இந்நிகழ்வு இலங்கை பல்கலைக்கழகங்களில் முதல் முறையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வொப்பந்த நிகழ்வில் ஆங்கில போதன மையத்தின் துணைத் தலைவரும் ஒப்பந்தத்தின் இணைப்பாளருமான கலாநிதி உமாசங்கர் கருத்துரை வழங்கினார்.

கலாநிதி அரசிலங்கோ தனது உரையில் இலங்கையில் அடுத்த மூன்று வருடங்களில் Meta Computing இனால் கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையில் தனித்துவமான அடையாளமாக மாறும் என்பதில் ஐயமில்லை எனக் குறிப்பிட்டார்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை அசுர வேகத்தில் முன்னேற்ற வடைந்து வரும் நிலையிலேயே இவ்வொப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனக சிங்கம், பதில் உப்பவேந்தர் வைத்திய கலாநிதி கருணாகரன், தகவல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

M M Fathima Nasriya

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.