திமுக அமைச்சர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் அண்ணாமலை நேரம் வரும்போது ஆவணங்களை வெளியிடுவேன் என்று பகிரங்கமாக பேசி வருவதையும் பார்க்கமுடிகிறது. காவல்துறையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமும் கருத்துக்களை சொல்லும் பாணியும் கண்டிஷனான அரசியலை வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி விஷயத்தில் அனல் பறந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு பாலுக்கு
ஜிஎஸ்டி
வரி விதித்துள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தற்போது விவாதமாகியுள்ளது. அமைச்சர் நாசர் பேசியபோது, ” வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக ஒன்றிய அரசு பாலுக்குக்கூட ஜிஎஸ்டி போட்டுள்ளது அதனால் தான் பாலில் விலை இத்தனை அளவு கூடியுள்ளது” என்று அமைச்சர் பேசினார். இதற்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை, அமைச்சர் நாசர் பேசிய வேறொரு ஆடியோவை வெளியிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த ஆடியோவில் பேசிய அமைச்சர், ” டிலைட் பாலுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி போட்ருக்காங்க, மோர், தயிருக்கு ஜிஎஸ்டி போட்ருக்காங்க” என்று பேசியுள்ளார். ஆனால், அனைத்து விதமான பாலுக்கு ஜிஎஸ்டி போட்டதாக அவர் சொல்லவில்லை. இதை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, மெஜந்தா, சிகப்பு, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற ஆவின் பால் வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பதை ஒப்புக்கொண்ட பால்வளத்துறை அமைச்சர். பொத்தாம் பொதுவாகப் பொய்களை சொல்லி மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதைத் திறனற்ற திமுக அரசு உணர வேண்டும். இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர். பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று சாடியுள்ளார்.
ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தமிழக அரசின் அலட்சியத்தால் அந்த சம்பவம் நடந்ததாக குற்றசாட்டு வைத்தார். மேலும் அந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் மீண்டும் வார்த்தை போர் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரியை குறித்து பொதுவான குற்றசாட்டை வைத்த அமைச்சர் நாசரை, அவரது ஆடியோவை வைத்தே அண்ணாமலை பதிலடி கொடுத்ததாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.