சென்னை:
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
கோவை, நாகர்கோவில், பல்லடம் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது எனவும் லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.