இந்தியன் 2 படத்திற்கு பிறகு H. வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.  நிதி சிக்கல் காரணமாக நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இதனையடுத்து லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்-2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படுமா அல்லது ‘கைதி-2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படுமா என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கமல்ஹாசன் நடிக்கப்போகும் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

அதன்படி நடிகர் கமல்ஹாசன், ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து வெளியான தகவல்களின்படி, ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப்போகும் படத்தின் பணிகள் 2023ம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்படும் என்றும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.  தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் ‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து ‘துணிவு’ படத்தை இயக்கிவரும் வேளையில், கமல்ஹாசனும் ‘இந்தியன்-2’ படத்தில் பிசியாக இருந்து வருகிறார்.  

அதனால் நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து முடித்த இரண்டு மாதங்களுக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகும் ‘துணிவு‘ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் இயக்குனர் ஹெச்.வினோத் கமல்ஹாசன் நடிக்கப்போகும் படத்திற்கான கதையையும் தயார் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது, விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.