அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என ஜி ஜின்பிங்
அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா மொத்தமாக கைவிட வேண்டும் என நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்.
அத்துடன், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி திரும்ப பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும் எனவும்,
@getty
அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக தெரிவான ஜி ஜின்பிங்கை சந்திக்கும் முதல் மேற்கத்திய தலைவரான சேன்ஸலர் Olaf Scholz,
பொதுமக்களைக் கொன்று நகரங்களை அழிக்கும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர புடினுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையிலேயே, அணு ஆயுத பயன்பாட்டை கைவிட வேண்டும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
@getty
ஆனால், துருப்புகளை திரும்ப அழைக்க வேண்டும் என்றோ, போருக்கு காரணம் ரஷ்யா என்றோ ஜி ஜின்பிங் குற்றஞ்சாட்ட மறுத்துள்ளார்.
உக்ரைன் மீதான போருக்கு முன்னர், விளாடிமிர் புடினை சந்தித்த ஜி ஜின்பிங் ஒன்றாக வெளியிட்ட அறிக்கையில், எல்லையற்ற ஒத்துழைப்பு மற்றும் நட்பின் புதிய சகாப்தம் இதுவென குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், போரின் தொடக்க நட்களில் ரஷ்யாவுக்கு ஆதரவாகவே சீனா கருத்து தெரிவித்து வந்துள்ளது.
ஆனால், உக்ரைனில் விளாடிமிர் புடினின் துருப்புகள் பேரடியை எதிர்கொள்ள, சீனாவின் அணுகுமுறையும் மாறியதாக கூறப்படுகிறது.
@reuters
மேலும், செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடந்த உச்சிமாநாட்டில், ஜியை சந்தித்த பிறகு அவருக்கு உக்ரைன் போர் தொடர்பில் கேள்விகள் மற்றும் கவலைகள் இருப்பதை விளாடிமிர் புடின் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.