பெங்களூரு :’ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், அதன் ஒரு லட்சமாவது மின்சார ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. அதுவும் 11 மாதங்களில். கிருஷ்ணகிரியில் உள்ள முழுவதும் பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் ஓலா தயாரிப்பு ஆலையிலிருந்து இவ்வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பண்டிகை மாதமான அக்டோபரில், இந்தியாவிலேயே அதிகமாக, கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது, ஓலா நிறுவனம்.
இதுகுறித்து, இந் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறியதாவது:
மின்சார வாகன சந்தை வேகம் எடுப்பதால், அடுத்த ஒரு லட்ச வாகனங்களை தயாரிக்க, தற்போது எடுத்துக் கொண்ட நேரத்தை விட பாதியாக குறையும். மேலும், மின்சார வாகனங்களை எதார்த்தமான ஒன்றாக மாற்றும் காலத்தை, இந்தியா நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement