கரகாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை : பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்து கரகாட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. கரகாட்ட நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியிருக்கிறது. நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்த, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கரகாட்ட நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடத்த வேண்டுமே என்றும், கரகாட்ட நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், நிகழ்ச்சி அமைப்பாளர்களே பொறுப்பு என்றும் ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிசாமி என்பவர் தனது கிராமத்தில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதால் இந்த நிகழ்ச்சியின் இறுதியாக வருகின்ற 8-ம் தேதி கரகாட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதியும், கரகாட்ட நிகழ்ச்சிக்கு காவல் துறையின் பாதுகாப்பு கோரியும் அவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுகுமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் எந்த ஆட்சியப்பனையும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய நீதிபதி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை வழங்கியுள்ளனர்.    

கரகாட்ட நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வார்த்தைகள், கண்ணியமான உடை அணிய வேண்டும் எனவும், கரகாட்ட நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என அனுமதி வழங்கியுள்ளது. கரகாட்ட நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், நிகழ்ச்சி அமைப்பாளர்களே பொறுப்பு என்றும், சாதி, சமூக போன்ற அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டாமல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சி, மதம், சமூகம், சாதியை குறிப்பிட்டு பாடல்கள், நடனமோ இடம்பெறக்கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்து கரகாட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை  அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்த, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.