குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் ஒதுக்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம்: கெஜ்ரிவால் பரபரப்பு புகார்

டெல்லி: குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் ஒதுக்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் மீது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில் பாஜக மீது கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார்.

குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் ஒதுங்கினால் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாக பாஜக பேரம் பேசியது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

எனினும், தன்னிடம் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளியிட மறுத்த கெஜ்ரிவால், பாஜக நேரடியாக இதுபோன்று அணுகாது எனவும் விளக்கம் அளித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மீதான கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.