குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கான 43 வேட்பாளருடன் கூடிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்றிரவு அறிவித்தது.
இதில் குட்டியானா சட்டமன்ற தொகுதியில் நாதாபாய் பூராபாய் ஓடெட்ரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2017 ம் ஆண்டு தேசிய வாத காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் சார்பில் நாதாபாய் பூராபாய் ஓடெட்ரா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியில் எந்த ஒரு முக்கிய பொறுப்பிலும் இல்லாத அடிமட்ட தொண்டரான தனக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கி இருப்பது மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஓடெட்ரா இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்திற்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் கட்லோடியா தொகுதியில் போட்டியிடும் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேலுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் அமி யாக்னிக் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
मुझ जैसे अंतिम पंक्ति के एक छोटे से कार्यकर्ता को कुटियाना से कांग्रेस का प्रत्याशी बनाए जाने पर शीर्ष नेतृत्व का आभार एवं धन्यवाद।
ऐसे फैसले ये जाहिर करते है कि कांग्रेस का छोटा कार्यकर्ता भी लगन और सच्ची निष्ठा से पार्टी के बड़े पद पर सुशोभित हो सकता है।@kharge@RahulGandhi pic.twitter.com/DrMx8DoQtn
— Nathabhai Odedra (@NathabhaiOdadra) November 5, 2022
பாஜக-வின் போலி வாக்குறுதியை நம்பி ஏமாந்த மக்கள் இம்முறை பாஜக-வுக்கு எதிராக திரண்டிருப்பது பிரதமர் மோடியின் கூட்டங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருவதில் இருந்தே உணரமுடிகிறது.
இந்த சரிவை சமாளிக்க முதல்முறையாக குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களமிறக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் பாஜக ‘பி’ டீம் என்று வர்ணிக்கப்படும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஆதரவு இருந்துவரும் நிலையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப்போவது யார் என்பது டிசம்பர் 8 ம் தேதி தெரியவரும்.