இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 நவம்பர்05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2022 நவம்பர் 05ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமானவானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை,குருநாகல்,கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.