சென்னை: தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தமிழகஅமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இதுவரை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சீனிவாசன் குடும்பத்தினரிடம் இருந்து வந்தது. இதை கைப்பற்ற பலர் முயற்சித்த நிலையில், கடந்த கிரிக்கெட் சங்க தேர்தலிலும் அமைச்சர் பொன்முடியின் இளையமகன் அசோக் சிகாமணி கடந்த ஆண்டும் போட்டியிட்டார். ஆனால், தலைவர் பதவியை சினிவாசன் மகள் ரூபா பெற்ற நிலையில், இவர் துணைத்தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் தலைவர் பதவியில் இருந்து ரூபா ராஜினாமா செய்த நிலையில், புதிதாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என மும்முரமாக களமிறங்கினார். மேலும், பிசிசிஐ தலைவரும், உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் ஆதரவும் சிகாமணிக்கு கிடைத்தாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியின்றி அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். செயலாளராக – R.I பழநியும், துணைச்செயலாளராக டாக்டர் ஆர்.என்.பாபா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் மூத்த மகன் கவுதம சிகாமணி கடலூர் தொகுதி எம்.பி.யாக உள்ள நிலையில், இளையமகன் டாக்டர் அசோக் சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இன்று நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
அசோக் சிகாமணி ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியின் வேட்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் அசோக் சிகாமணி களமிறக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரபு என்பவர், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், போட்டியின்றி அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் அசோக் சிகாமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்திய கிரிக்கெட்டின் அச்சாணிகளில் ஒன்றான, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, போட்டியின்றி தேர்வாகியிருக்கும், சகோதரர் Dr.P.அசோக் சிகாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.