சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தை ஈர்த்த ராணி கமிலா.
அதற்கு பின்னால் உள்ள சுவாரசியமான குறியீடு.
மன்னர் சார்லஸின் மனைவி கமிலா, ஆடையுடன் இணைந்திருக்கும் விலையுயர்ந்த சிறிய வைர அணிகலனை சமீபத்தில் அணிந்தபடி பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதன் மூலம் கூறப்படும் குறியீடு குறித்து தகவல் கசிந்துள்ளது.
பிரித்தானியாவின் மன்னர் பொறுப்பை சார்லஸ் ஏற்றுள்ள நிலையில் ராணி (Queen Consort) பொறுப்பு கமிலாவுக்கு வந்துள்ளார்.
நவம்பர் 2, 2022 அன்று டீம் ஜிபி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு சார்லஸ் மற்றும் கமிலா விருந்தளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வெல்வெட் நீல உடை மற்றும் ஆடையுடன் இணைக்க பயன்படும் சிறிய வைர அணிகலனை அணிந்து வந்து கமிலா கவனத்தை ஈர்த்தார், இது உடை ஊசியாகும். அவர் அணிந்திருந்த அணிகலனின் மதிப்பு £13,000 இருக்கும் என தெரிகிறது.
Chris Jackson / Getty / Kin Cheung/PA Wire
இதற்கு பின்னால் பெரிய அர்த்தமிருப்பதாக கணிக்கின்றனர் நிபுணர்கள்.
ஸ்டீவன் ஜோன் கூறுகையில், சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட கமிலாவின் அணிகலன் குறியீடு கொண்டுள்ளதாகவே நினைக்கிறேன்.
மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவர் அணிந்த முதல் உடை ஊசி போன்ற அணிகலன் இதுவாகும்.அதாவது தான் ராணி மற்றும் தன்னுடைய புதிய அரச பாத்திரத்திற்கான தனது அர்ப்பணிப்பை காட்ட அவர் இதை தேர்ந்தெடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.
இதே போன்று உடையுடன் இருக்கும் சிறிய அணிகலனை தான் மறைந்த இரண்டாம் எலிசபெத் விரும்பி அணிவார் என்பது குறிப்பிடத்தக்கது.