சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது பிளட் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. வருகிற நவம்பர் 8 ஆம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கின்றது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது.. முழு சூரிய கிரகணம் என்றும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது.. பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தவகையில், வரும் நவம்பர் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. மத நம்பிக்கைகளின்படி, கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. எனவே பழனி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 8ம் தேதி மதியம் 2.30 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மலைக்கோவிலில் வருகின்ற 8ம் தேதியன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதி, பரணி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் மாலை 5.47 மணிக்கு தொடங்கி 6.26 மணிக்கு முடிவடைவதால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்தபின் பிற்பகல் 2:30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கபடும் எனவும் அன்று காலை 11:30 மணி முதல் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை இயங்காது எனவும் அனைத்து டிக்கெட்டுகளும் நிறுத்தப்படும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் சந்திர கிரகணம் முடிவுற்றதும் மாலை 7 மணிக்கு மேல் சம்ப்ரோசன, என பூஜை நடைபெற்ற பின் சாயரட்ஜை பூஜையும் தொடர்ந்து தங்கரத புறப்பாடு அதன் பின்னர் ராக்கால பூஜையும் நடைபெறும் இரவு 7 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.